இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும், இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க வேண்டும், என்று சேனல் நிர்வாகம் விரும்புவதால், தற்போது கமலின் முடிவுக்காக காத்திருக்கிறார்களாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதால் மக்களிடம் பிரபலமடைவதால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பதால் பலர் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து வருகிறார்கள். ரைசா, ஹரிஷ் கல்யாண் என பல பிக் பாஸ் மூலமாக சினிமா வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற கவின் இரண்டு திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு போட்டியாளரான தர்ஷனும் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர்களைப் போல பிக் பாஸ் முதல் சீசனின் டைடிலை வென்ற ஆரவும் ஹீரோவாகிவிட்டார். சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் மூலம் ஹீரோவான ஆரவ், தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ஆனால், ஆரவ் ஹீரோவாக அறிமுகமான ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. குறிப்பாக ஆரவின் நடிப்பு சரியில்லை என்றும், அவர் படத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தி போகவில்லை என்று விமர்சிக்கப்பட்டதால், ஆரவ் ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
மேலும், பிரபல நடிகர் ஒருவரிடம் நடிப்பு பயிற்சி எடுத்து வரும் ஆரவ், அப்பயிற்சி பிறகே புதிய படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளாராம். அதனால், தற்போது ‘ராஜபீமா’ படத்தை தவிர வேறு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளாதா ஆரவு, தன்னிடம் கதை சொல்ல முயற்சிப்பவர்களையும் நிராகரித்து விடுவதாக கூறப்படுகிறது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...