Latest News :

அஜித் - ஷங்கர் கூட்டணி! - கலைத்த கமல்ஹாசன்
Saturday September-16 2017

‘விவேகம்’ படத்திற்குப் பிறகு அஜித் நடிக்க உள்ள படத்தையும் சிவா தான் இயக்கப் போகிறார் என்றும், அதற்காக கதை எழுதிவதில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளர் என்றும் தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

 

தற்போது ரஜினிகாந்தை வைத்து 2.0 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஷங்கர் அப்படத்திற்குப் பிறகு அஜித்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

 

இந்த நிலையில், அஜித் - ஷங்கர் கூட்டணியை கலைக்கும் விதமாக கமல்ஹாசன் இந்திய 2 படத்தை இயக்க ஷங்கருக்கு அழைப்பு விட்டதாகவும், ஷங்கரும் அதற்கு சம்மதம் தெரிவித்து, அஜித் படத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

 

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் மிகப்பெரிய பிரம்மாண்ட படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகளில் கமல்ஹாசன் ஈடுப்ட்டுள்ளார். இதை ஷங்கரே இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதால், ஷங்கருக்கு அழைப்பு விடுக்க, ஷங்கரும் அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டாராம்.

 

இதனால், அஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற அஜித்தின் ஆசை கலைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related News

602

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery