Latest News :

லைகா சுபாஷ்கரனின் வளர்ச்சியால் பயந்து போன சன் டிவி!
Monday December-23 2019

இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் லைகாவுக்கு சொந்தக்காரர் சுபாஷ்கரன் என்ற தமிழர். இலங்கை தமிழரான இவர், உள்நாட்டு போரினால் தனது சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்து இங்கிலாந்துக்கு சென்றவர், தனது கடினமான உழைப்பினால், இன்று உலக பிரபலங்களில் ஒருவராக திகழ்கிறார்.

 

தற்போது தொலைதொடர்பு துறை மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளில் கால் பதித்து வரும் லைகா நிறுவனம், தமிழகத்திலும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்த் திரையுலகில் முன்னணி திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக லைகா புரொடக்‌ஷன்ஸ் திகழ்கிறது. ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தினால், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களில் தலயாக உருவெடுத்துள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரனின் அசுர வளர்ச்சியை கண்டு சிலர் பயப்பட தொடங்கியிருப்பது சமீபத்திய நிகழ்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அரசியல் செல்வாக்கு மிக்க சன் டிவி. 

 

சன் டிவி தனது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும் விநியோகம் செய்தும் வருகிறது. திமுக ஆட்சியில் இருந்த போது சன் பிக்சர்ஸ் உச்சத்தில் இருந்தாலும், அதிமுக ஆட்சியில் தனது பணியை நிறுத்திவிட்டது. தற்போது மீண்டும் திரைப்படங்கள் தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் தீவிரம் காட்டி வர, அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் லைகா நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டால், சற்று பயந்து போயிருக்கிறார்கள், என்பதை நேற்று ஒளிபரப்பான ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா உணர்த்தியுள்ளது.

 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நேற்று சன் டிவி-யில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வில் திரையிடப்பட்ட லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனின் சாதனைகள் மற்றும் அவர் தமிழகர்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்கள் பற்றிய வீடியோ பதிவை சன் டிவி ஒளிபரப்பவில்லை.

 

உலக அளவில் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் சுபாஷ்கரன், இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். வீடுகள் என்றால் சாதாரணமாக அல்லாமல், ஒரு கிரவுண்ட் இடத்தில் சகல வசதிகளும் கொண்ட வீடுகளை அவர் கட்டிக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த வீடுகளை தமிழக ஊடகத்துறையினர் நேரில் சென்று பார்த்து அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை தமிழர்களுக்கு மட்டும் இன்றி கர்நாடாகவில் வாழும் தமிழர்கள் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழகர்களுக்கும், ஆப்பிரிக்கா போன்ற பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் உள்ள மக்களுக்கும் சுபாஷ்கரன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அவரது இத்தகைய பணியில் சிறிய தொகுப்பு ஒன்றை தான் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சியை சன் டிவி ஓளிபரப்பும் போது, சுபாஷ்கரனின் வீடியோ பதிவை நீக்கியிருக்கிறார்கள். அவர்களின் இந்த செயல், லைகா நிறுவனத்தையும், சுபாஷ்கரனின் வளர்ச்சியையும் கண்டு அவர்கள் பயந்து போயிருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

 

அரசியல் செல்வாக்குடன் போட்டியாளர்களை வீழ்த்தி, வெற்றி பெற்று வந்த சன் டிவி, சுபாஷ்கரன் என்ற தனிமனிதனின் வளர்ச்சியையும், அவரது சாதனைகளையும் மறைக்க செய்திருக்கும் இந்த சதி திட்டமே, அவரைப் பற்றி தமிழக மக்களும், உலக தமிழர்களும் அறிந்துக் கொள்வதற்கான ஆரம்பமாக அமைந்திருக்கிறது. சன் டிவி-யின் இத்தகைய செயலுக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

 

சுபாஷ்கரன் கடந்து வந்த பாதை மற்றும் அவரது வளர்ச்சி பிரமிப்பான விஷயம், அவரது வாழ்க்கை குறித்து கேட்கும் போது, இப்படி எல்லாம் ஒரு மனிதரால் பிரச்சினைகளை கடந்து வெற்றி பெற முடியுமா, என்று ஆச்சரியமாக இருந்தது, என்று திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் கூறியிருந்தார்கள். 

 

மேலும், சுபாஷ்கரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6020

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery