மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே மிகப்பெரிய சாதனைகளை செய்ததோடு, தற்போதும் மக்களின் இதயங்களில் இருக்கும் தலைவராக திகழ்கிறார். திரைப்படங்களில் நடிக்கும் போது கூட மது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்ப்பவர், பெண்களிடமும் கண்ணியத்தை கடைபிடிப்பவராகவே திரையில் தோன்றுவார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை, வில்லனாக சித்தரித்திருப்பதோடு, நடிகைகளை தனது கைப்பாவைகளாக வைத்திருந்தது போல காட்டியிருக்கிறது ‘குயின்’ என்ற வெப் சீரிஸ்.
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ’குயின்’ என்ற வெப் சீரிஸை, ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை, என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இது ஜெயலலைதாவின் வாழ்க்கை கதை என்பது அனைவரும் அறிந்தது தான். இந்த வெப் சீரிஸை பிரபல திரைப்பட இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் ’கிடாரி’ படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேஷ் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் பள்ளி பருவம், நடிகையாக இருந்தது மற்றும் அரசியல் எண்ட்ரி என மூன்று காலக்கட்டங்களாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் ஜி.எம்.ஆர் என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து அவரை வேறு யாருடனும் நடிக்க விடாமல், தனது அடிமையை போல எம்.ஜி.ஆர் ஆட்டி வைத்தது போல காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் கெளதம் மேனன், ஜெயலலிதா மட்டும் இன்றி, பல நடிகைகளை எம்.ஜி.ஆர் தனது கைப்பாவைகளாக வைத்திருந்தது போலவே காட்சிகளை சித்தரித்திருக்கிறார்.
அதுவும், தனது விருப்பத்திற்கு மாறாக ஜெயலலிதா வேறு ஒரு முன்னணி நடிகர் படத்தில் நடிக்கும் போது, எம்.ஜி.ஆர் செய்யும் சதியால் அந்த படத்தில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றுவது போன்ற காட்சியை வைத்திருக்கும் கெளதம் மேனன், படிக்க ஆசைப்படும் ஜெயலலிதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும், அதற்காக அவர் சினிமாவை விட்டு விலக தயாராக இருந்த போதும், எம்.ஜி.ஆரின் சர்வாதிகாரத்தால் அதை அவரால் செய்ய முடியாமல் போகிறது. மொத்தத்தில், ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் அடிமைகளில் ஒருவராகவே இருந்தார், என்று சொல்லும் இந்த ‘குயின்’ வெப் சீரிஸில் கிட்டதட்ட எம்.ஜி.ஆரை வில்லனாகவே காட்டியிருக்கிறார்கள்.
இந்த வெப் சீரிஸை எம்.ஜி.ஆரின் தீரிவிர ரசிகர்களோ அல்லது தொண்டர்களோ பார்த்தார்கள் என்றால், நிச்சயம் இயக்குநர் கெளதம் மேனனுக்கு எதிராக பெரிய போராட்டத்தையே நடத்துவார்கள் என்பது உறுதி.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...