’எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நமீதா, தனது அபரிவிதமான கவர்ச்சியால் தமிழக ரசிகர்களை கிரங்கடித்தவர் அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தவர், 2010 ஆம் ஆண்டு வரை பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.
சினிமா வாய்ப்புகள் இல்லாததால் டிவி பக்கம் தாவிய நமீதா, சில டிவி நிகழ்ச்சியில் நடுவராக இருண்டார். இதற்கிடையே, தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வந்த நமீதா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் வீரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
தற்போது கணவருடன் சென்னையில் வசித்து வரும் நமீதா, தனக்கு வாய்ப்பு தேடுவதோடு, கணவருக்கும் வாய்ப்பு தேடி வந்தாராம். அவரது தேடலுக்கு சரியான வாய்ப்பு ஒன்று தற்போது கிடைத்திருக்கிறது.
ஆம், நமீதாவின் கணவர் வீரா பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
விரைவில் ஒளிபரப்பாக உள்ள அந்த சீரியலை, சம்மந்தப்பட்ட டிவி சேனல் விளம்பரம் செய்வதை இட அதிகமாக நமீதா விளம்பரம் செய்து வருகிறார். அவ்வபோது அந்த சீரியலின் புரோமோக்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை நமீதா வெளிப்படுத்தி வருகிறார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...