’சுப்பிரமணியபுரம்’ படம் மூலம் பிரபலமான ஜெய், அதன் பிறகு தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சோலோ ஹீரோவாக அவரால் வெற்றி பெற முடியவில்லை. ‘ராஜா ராணி’, ‘எங்கேயும் எப்போதும்’ என்று தொடர்ந்து மல்டி ஹீரோ சப்ஜக்ட் படங்கள் மூலம் தான் வெற்றியை கொடுக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, நடிகை அஞ்சலியுடன் காதல், இஸ்லாம் மதத்திற்கு மாறியது என்று எப்போதும் சர்ச்சைகளின் நாயகனாகவும் ஜெய் வலம் வருகிறார்.
இதற்கிடையே அஞ்சலியுடனான காதல் மற்றும் கல்யாணத்தை மறுத்திருக்கும் ஜெய், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்திருக்கிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாக கூறியிருக்கும் ஜெய், அம்மதம் மீது தனக்கு ஏற்பட்ட அபரிவிதமான நம்பிக்கை தான், இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ள செய்ததாக கூறியிருக்கிறார். மேலும், கடவுளையே வணங்காத பிள்ளை ஏதோ ஒரு கடவுளையாவது வணங்குகிறானே, என்று அவரது பெற்றோரும் அவரது முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லையாம்.
அதேபோல், இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும் இதுவரை தனது பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் ஜெய், விரைவில் தனது பெயரை அஜீஸ் ஜெய்னு மாற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...