தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஷாலினி பாண்டேவுக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திற்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கியவர் ஜீவா நடித்த ‘கொரில்லா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிர்காஷ் குமார் நடித்த ‘100% காதல்’ படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, நடிகை ஷாலிணி பாண்டே மீது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்ததோடு, அவர் மீது மோசடி வழக்கு ஒன்றையும் போட்டிருக்கிறார்.
’மூடர் கூடம்’ நவீன் இயக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார். விஜய் ஆண்டனி, அருண் விஜய் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், இப்படத்திற்கு முதலில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஷாலினி பாண்டே தானாம். ஆனால், அவர் தொடர்ந்து படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை நீக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஹீரோயினாக்கி படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார்கள்.
இது குறித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் டி.சிவா, ”‘100% காதல்’ படத்திற்காக ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை ஷாலினி பாண்டேவை ‘அக்னி சிறகுகள்’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தோம். அதற்காக அவருக்கு ரூ.35 லட்சம் சம்பளம் பேசி, அட்வான்ஸாக ரூ.15 லட்சம் வழங்கியதோடு, அவரிடம் 100 நாட்கள் கால்ஷீட்டுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. சுமார் 27 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோர் பங்குபெறும் காட்சிகளை 40 நாட்கள் படமாக்க திட்டமிட்டு, அதற்கான தேதிகளை அனைத்து நடிகர்களையும் பெற்று, படப்பிடிப்புக்கு போக தயாரான நிலையில், ஷாலின் பாண்டே இந்தி படத்தில் நடிக்க போகிறேன், அதனால் தேதி கொடுக்க முடியாது. 6 மாதத்திற்கு பிறகு வேண்டுமானால் தேதி தருகிறேன், என்று கூறினார்.
ஆனால், ஏற்கனவே அனைத்து திட்டங்களையும் போட்டு வைத்துவிட்டு, அதில் மாற்றம் செய்ய முடியாததால், எங்களது நிலையை அவரிடம் விளக்கியும் அதை ஏற்றுக் கொள்ளாதவர், தான் பாலிவுட் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். மேலும், ரன்வீர் கபூர் படத்தில் நடித்த பிறகு, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க எனக்கு அவசியம் ஏற்படாது. அதனால், என் மீது எங்கு வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள், என்னால் தற்போது தொடர்ந்து உங்கள் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாது, என்று கூறினார்.
இதனால், அவருக்கு பதிலாக அக்ஷரா ஹாசனை ஹீரோயினாக்கி தற்போது படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதே சமயம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகை ஷாலினி பாண்டே மீது புகார் அளித்திருப்பதோடு, அவர் மீது நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறேன்.
ஷாலினி பாண்டேவை வைத்து படமாக்கப்பட்ட 27 நாட்கள் படப்பிடிப்பை மீண்டும் ரீ ஷூட் செய்ய இருக்கிறோம். அதற்கு என்ன செலவு ஆகுமோ அதை அவரிடம் இருந்து பெற வேண்டும் மற்றும் நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை பெற வேண்டும் என்பதற்காக தான் அவர் மீது புகார் அளித்திருக்கிறோம். ரன்வீர் கபூர் படத்தில் நடிக்க என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அவர், அதற்காக விலையையும் கொடுத்தாக வேண்டும் அல்லவா. மேலும், அவரிடம் கூடுதலாக பணம் பறிக்கவோ அல்லது அவரை தண்டிக்கவோ எங்களுக்கு விருப்பமில்லை. அவரால் எங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதனாலேயே அவர் மீது புகார் அளித்திருக்கிறோம்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...