மேடை இசை நிகழ்ச்சிகளை கான்சர்ட் திரைப்படம் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பல இசையமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்தியாவின் முதல் இசை கான்சர்ட் திரைப்படமாக ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ஒன் ஹார்ட்’ கடந்த வாரம் வெளியானது.
உலகம் முழுவதும் வெளியான இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 103 திரையரங்கங்களில் வெளியான நிலையில், படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் படத்திற்கு செலவு என்று ஒன்றுமில்லாததால் படத்தை தயாரித்த ஏ.ஆர்.ரஹ்மான் தப்பித்தார் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மான நடத்திய இசை நிகழ்ச்சியை தான் ஒன் ஹார்ட் என்ற தலைப்பில் கான்சர்ட் படமாக வெளியிட்டார்கள். ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற இத்தகைய திரைப்படங்கள் இந்தியாவில் முதல் முறையாக வெளியாகி, முதல் முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது.
ஒன் ஹார்ட் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தையும் ’ஒன் ஹார்ட்’ என்ற தனது அறக்கட்டளைக்கு கொடுப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சர்வதேச சவுண்ட் டிராக் விருதுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். சர்வதேச அளவில் இசை, பாடல் சார்ந்த கலைஞர்களுக்கு பின்னணி இசை, பாடல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 17 வது சவுண்ட் டிராக் விருது விழாவில் மக்களுக்கு பிடித்தவர் பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மான் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...