Latest News :

சீரியல் நடிகைகளின் கள்ளக்காதல்! - டிவி சேனல் எடுத்த அதிரடி நடவடிக்கை
Wednesday December-25 2019

சினிமா நடிகைகளையும் ஓவர் டேக் செய்யும் அளவுக்கு சீரியல் நடிகைகள் மக்களிடம் பிரபலமாகி வருகிறார்கள். இதன் மூலம் பல சீரியல் நடிகைகள் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

 

இதற்கிடையே, சீரியல் நடிகை மகாலக்‌ஷ்மிக்கும், நடிகர் ஈஸ்வருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக ஈஸ்வரின் மனைவியும், சீரியல் நடிகையுமான ஜெயஸ்ரீ, சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஈஸ்வர், ஜாமீனில் வெளியே வந்ததும், ஜெயஸ்ரீ மீது பரபரப்பு புகார் அளித்தார். பணத்திற்காக நாடகம் ஆடும் ஜெயஸ்ரீக்கும், நடிகை மகாலஷ்மியின் கணவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக கூறினார்.

 

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மகாலஷ்மியின் கணவன், தனக்கும் ஜெயஸ்ரீக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் தனது சகோதரி போன்றவர். தான் இப்போதும் மகாலஷ்மியும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன், ஆனால் அவர் தான் தன்னை நிராகரித்து வருகிறார், என்று கூறினார்.

 

இப்படி ஒருவர் மீது ஒருவர் கள்ளத் தொடர்பு புகார் கூறி வந்த நிலையில், ஈஸ்வரும், மகாலஷ்மியையும் சேர்த்து வைத்த ‘தேவதையை கண்டேன்’ என்ற சீரியல் ஒளிபரப்பாகி வரும் பிரபல சேனல் அதிரடி முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

 

கள்ளக்காதல் விவகாரத்தில் ஈஸ்வரும், மகாலஷ்மியும் சிக்கியதால் ‘தேவதையை கண்டேன்’ சீரியலின் படப்பிடிப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், மக்களிடம் தற்போது சீரியலுக்கான வரவேற்பு குறைந்திருப்பதால், ‘தேவதையை கண்டேன்’ சீரியலை விரைவில் முடித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு சீரியலை ஒளிபரப்பு சேனல் முடிவு செய்துள்ளதாம்.

Related News

6033

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery