”ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டு” என்று கூறிய ஏசுநாதரின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் நாளில் மக்களுக்கு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், அனைத்து நிகழ்வுகளுக்கும் மக்களுக்கு வாழ்த்து கூறும் ‘களவாணி 2’ வில்லன் நடிகர் துரை சுதாகர், ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் துரை சுதாகர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், “சமாதானத்துடன் வாழுங்கள், என்று போதித்த ஏசுநாதரின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் நன்நாளில், மக்கள் அனைவரும் சமாதானத்துடன் சமத்துவம் பழகி சந்தோஷமாக வாழ வேண்டும். பிறருக்கு தங்களால் முடிந்ததை கொடுத்து கொண்டாடும் இந்த திருநாளில், பிறரை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷம் அடைவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
‘களவாணி 2’ படத்தை தொடர்ந்து ‘டேனி’ படத்தில் அதிரடி காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் துரை சுதாகர், மக்கள் செல்வி வரலட்சுமி சரத்குமாருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்.
‘களவாணி 2’ படத்தில் வித்தியாசமான வில்லத்தனத்தை காட்டி பாராட்டு பெற்ற துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் வித்தியாசமான போலீஸாக மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...