Latest News :

ஒரு படத்தை வெளியிடுவதே வெற்றி தான்! - ‘டோலா’ தயாரிப்பாளர் டாக்டர்.ஷாம் குமார்
Thursday December-26 2019

இரண்டு கதாப்பாத்திரங்கள் மட்டுமே நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் ‘டோலா’. வெறும் 10 நாட்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர்.ஷாம் குமார் பேசுகையில், “தயாரிப்பாளருக்கு முதல் படம் எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், படம் வெளியிடும் அளவிற்கு வருவதே வெற்றி தான். நடிப்பது பெரிய கலை. இயக்குநரின் கருவை உள்வாங்கி முகபாவனை கொடுப்பதற்கு திறமை வேண்டும். அந்த பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் கதாநாயகி பிரேர்னா. நாயகன் ரிஷியும் நாயகியுடன் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார். அணில் மற்றும் மணி இருவரும் நன்றாக இசையமைத்திருக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் ஆதிசந்திரன் பேசுகையில், “இப்படத்தைப் பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கின்றது. நான் ஏகலைவன் போல் இயக்குநர் பாக்யராஜிடம் இயக்கத்தைக் கற்றுக் கொண்டேன். பொதுவாக நான் பாடல்களிலும், இசையிலும் தலையிடுவேன். என் விருப்பத்திற்கேற்றாற் போல் இசையமைத்துக் கொடுத்த அணில் மற்றும் மணி இருவருக்கும் நன்றி. ஒளிப்பதிவாளரைப் பற்றி காட்சிகளே கூறும். தயாரிப்பாளர் ஷாம் நல்ல மனிதர்.” என்றார்.

 

நடிகர் சரண்ராஜ் பேசுகையில், “என்னையும் என் மகனையும் வைத்து ‘ரகுடு’ படத்தைத் தயாரிக்கிறார் ஷாம் குமார். அசோக் இப்படத்தை இயக்குகிறார். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இயக்குநர் பாக்யராஜ் படம் இயக்குவதாக இருந்தால், நான் அப்படத்தை தயாரிப்பேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் நான் தயாரிப்பேன்.” என்றார்.

 

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “‘டோலா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களைப் பார்க்கும் போது ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகம் தான். காட்சி அமைப்புகளைப் பார்க்கும்போது ஒளிப்பதிவாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. கதாநாயகியும் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்போதும் நல்ல கதையம்சம் கொண்ட படம் வெற்றிபெறும். இப்படமும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Ragudu First Look Launch

 

‘டோலா’ இசை வெளியீட்டுக்குப் பிறகு ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான ‘ரகுடு’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Related News

6037

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery