Latest News :

பிரபல சீரியல் நடிகை ரேகாவின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை!
Friday December-27 2019

தமிழ் சீரியல் உலகில் பிரபலமாக இருப்பவர் ரேகா. சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் ரேகாவின் கணவர் கோபிநாத். 39 வயதாகும் கோபிநாத் அண்ணா நகரில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றில் மேனஜராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

 

இதற்கிடையே, கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரேகாவுக்கும், கோபிநாத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கோபிநாத் கடன் பிரச்சினையிலும் சிக்கி தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், தனது அலுவலக அறையில் நேற்று முன் தினம் கோபிநாத் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

 

கோபிநாத்தின் அலுவலகத்திற்கு மூன்று சாவிகள் இருக்கிறதாம். அதில் ஒன்று கோபிநாத்திடம் இருக்குமாம். நேற்று முன் தினம் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், அலுவலகத்தில் யாரும் இல்லை. அப்போது அலுவலகத்திற்கு வந்த கோபிநாத், தனது அறையில் தூக்கு போட்டுக் கொண்டுள்ளார்.

 

விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல ஊழியர்கள் அலுவலகம் வந்தபோது, அலுவலகம் பூட்டாமலேயே இருந்திருக்கிறது. பிறகு உள்ளே சென்ற போது கோபிநாத் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியடித்து ஓடிவந்திருக்கிறார்க. இது குறித்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Rekha and Gopinath

Related News

6039

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery