நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதோடு, வில்லியாகவும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம் உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
’டேனி’ என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி, தற்போது ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘பிறந்தநாள் பராசக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் வரலட்சுமி நடிப்பது குறித்து பேசிய சரத்குமார், “வரலட்சுமி சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, காலதாமதமாக வெளியானது. அந்த சமயத்தில் நான் மற்ற இயக்குநர்களிடம் பேசி வரலட்சுமிக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருந்ததற்கு தற்போது நான் வருந்துகிறேன். அதற்கு இப்போது வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...