தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷ், பாலிவுட் மட்டுமின்றி ஆங்கிலப் படத்திலும் நடித்திருக்கிறார். இந்த வருட தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் தனுஷின் ‘அசுரன்’ படம் முக்கியமான இடம் பிடித்திருப்பதோடு, அப்படத்தின் மாபெரும் வெற்றியால் தனுஷின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் போட்ட முறுக்கு மீசை கெட்டப்பில் தனுஷ் மதுரை படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மதுரையில் தனுஷுக்கு திருமணம் ஆவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக பிரம்மாண்டமான திருமண மேடை அமைக்கப்பட்டதோடு, மிகப்பெரிய விருந்து ஏற்பாடும் நடந்ததாம். இதனால், மதுரையே தனுஷின் கல்யாண காட்சிக்கு திரண்டதால், நேற்று முழுவதும் மதுரை முழுவதும் பரபரப்பாக இருந்ததாம்.

மதுரை காட்சிகளை முடித்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நாளை பழனியில் உள்ள தனக்கனாம்பட்டி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...