தமிழ் சினிமாவின் இரும்புக் கதவுகளை எளியவர்களுக்கு திறந்துவிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். ‘குரங்கு பொம்மை’ படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது சில படங்களில் நடித்து வரும் பாரதிராஜா, இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வரும் வெப் சீரிஸ் உலகில் நுழைகிறார். அதுவும் தனது கனவுப் படைப்பான ‘குற்றப் பரம்பரை’-யுடன்.
பாரதிராஜாவின் கனவு திரைப்படமாக இருக்கு இந்த ‘குற்றப் பரம்பரை’ படத்தை எடுக்க் அவர் பல முறை முயற்சித்திருந்தாலும், சில காரணங்களால் அவரது கனவு கனவாகவே இருக்கும் நிலையில், அந்த கனவை நிஜமாக்குவதற்காக பாரதிராஜா வெப் சீரிஸ் உலகில் நுழைகிறார்.
வி ஹவுஸ் சார்பில் சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் வெப் சீரிஸ் தொடராக ‘குற்றப் பரம்பரை’ யை பாரதிராஜா இயக்கி நடிக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், எந்த ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாகும் என்பது குறித்து மேலும் பல தகவல்களை விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளனர்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...