Latest News :

’370’ ரிலிஸுக்கு பிறகு ரிஷிகாந்த் பெரிய ஹீரோவாகி விடுவார்! - பாபு கணேஷ் நம்பிக்கை
Friday December-27 2019

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் உள்ளிட்ட 14 கிராப்ட்களை ஒரே நேரத்தில் கையாண்டு கின்னஸ் உலக சாதனைப் படைத்திருக்கும் நடிகர் பாபு கணேஷ், புதிய சாதனையாக 48 மணி நேரத்தில் முழு படத்தையும் முடித்திருக்கிறார்.

 

‘370’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், உலக ஆண் அழகன் போட்டியில் 6 வது இடம் பிடித்த ரிஷிகாந்த்  ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக பெங்காலி நடிகை மெகாலி, நிஷா, உலக அழகி பட்டம் பெற்ற திருநங்கை நமீதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக பெசண்ட் நகர் ரவி, கராத்தே கோபால், ராஜ்கமல், வெற்றி, சிவன் ஸ்ரீனிவாசன், ரோஜா, போகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கிறார்.

 

வெறும் 48 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் இப்படம் புதிய சாதனை நிகழ்த்தியிருப்பதோடு, தேசத்திற்கான படமாகவும் உருவாகியிருக்கிறது. 

 

தற்போது படத்தை முடித்துவிட்டு, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பாபு கணேஷ் முதல் முறையாக நேற்று பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தாணு கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, “பாபு கணேஷ் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த புதிய சாதனை ஆச்சரியமாக இருக்கிறது. 48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்திருக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட திட்டங்களை வகுத்திருப்பார். புதிதாக படம் தயாரிக்க வருபவர்கள் பாபு கணேஷ் போன்றவர்களிடம் திட்டமிடுதல் குறித்து கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும். இந்த ‘370’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

370 Movie Press Meet

 

நிகழ்ச்சியில் பேசிய பாபு கணேஷ், “இப்படி ஒரு படம் நான் எடுக்கப் போகிறேன், என்ற போது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது முடியுமா? என்றும் கேட்டார்கள், ஏன் படத்தில் நடித்தவர்களுக்கே அந்த சந்தேகம் இருந்தது. ஆனால், தற்போது சொன்னபடி படத்தை முடித்துவிட்டேன். இப்பவும் என்னை ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். சரியான திட்டமிடுதல் இருந்தால் நிச்சயம் எது வேண்டுமானாலும் சாதிக்கலாம். 

 

இந்த படத்தி ஹீரோவாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், கமாண்டோ வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் காட்டிய ஈடுபாட்டை பார்த்து நானே அசந்துவிட்டேன். அவர் வில்லனாக நடிக்க தான் ஆசைப்பட்டார். ஆனால், நான் தான் இந்த வேடம் உனக்கு சரியாக இருக்கும், என்று கூறி நடிக்க வைத்தேன். இந்த படம் ரிலீஸான பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி தயாரிப்பாளர்கள் அனைவரும் ரிஷிகாந்தை ஹீரோவாக வைத்து படம் பண்ண விரும்புவார்கள். ரிஷிகாந்த் நிச்சயம் பெரிய ஹீரோவாகி விடுவார். அதேபோல் நடிகை மெகாலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். ” என்றார்.

 

சுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தாக்குவார் தங்கம், விஜய் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரமாதேவி மற்றும் அபிநயஸ்ரீ நடனம் அமைத்துள்ளனர்.

Related News

6048

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery