தெலுங்கு சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான சுனைனா, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர், ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானர். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்தாலும், சுனைனாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இரண்டாவடு ஹீரோயின், அறிமுக ஹீரோக்களின் படம் என்று சிறு சிறு வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு கிடைத்ததை தொடர்ந்து தற்போது வெப் சீரிஸ்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இதற்கிடையே, நேற்று வெளியான ‘சில்லுக் கருப்பட்டி’ படத்தில் சுனைனாவின் நடிப்பு பாராட்டு பெற்றுள்ளது. இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக அப்படம் இருக்கும் என்று விமர்சனங்களில் குறிப்பிட்டிருக்கும் ஊடகங்கள் சுனைனாவின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
இதனால், உற்சாகமடைந்துள்ள சுனைனா, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், “உங்களுக்கு திருமணமாகி விட்டதாக தகவல் வெளியாகிறதே உண்மையா?” என்று கேட்க, இந்த கேள்வியால் சுனைனா அதிர்ச்சியடைந்தாரோ இல்லையோ, மற்ற ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள்.
ஆனால், ரசிகரின் இந்த கேள்விக்கு பொருமையாக பதில் சொன்ன சுனைனா, “எனக்கு திருமணமாகவில்லை, அப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தால், அதை வெளிப்படையாக அறிவிப்பேன்” என்று தெரிவித்தார். மேலும், தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், என்றும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...