சின்னத்திரை நடிகையும், நடனக் கலைஞருமான நீபா, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக விஜயின் ‘காவலன்’ படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவர் பிரபலமானர். இவரது அம்மா மாலினியும், அப்பா வாமனனும் நடன கலைஞர்கள் ஆவர்.
சில படங்களில் ஹீரோயினாக நடித்த நீபா, திடீரென்று சினிமாவில் இருந்து ஒதுங்கி டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை முழுமையாக விட்டுவிட்டார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நீபா, சமீபத்திய பேட்டி ஒன்றில், சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
கவர்ச்சியாக நடிப்பவர்களை சமூகம் தவறாக எண்ணுகிறது. ஆனால், அவர்கள் எந்த கஷ்ட்டமான சந்தர்ப்பத்தில் அப்படி நடிக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது. ஆனால், அவர்கள் தவறாக பேசிவிட்டு என்று விடுவார்கள்.
சினிமாவில் முன்னணி நடிகைகளே கவர்ச்சியாக நடிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் நடிக்கும் போது அவர்களை பற்றி யாரும் எந்த கமெண்டும் செய்வதில்லை. ஆனால், என்னை போல இருக்கும் நடிகைகள் கவர்ச்சியாக நடித்தால் தவறாக பேசுவது, கமெண்ட் அடிப்பது வருத்தமாக இருக்கிறது.
பிறரை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளாமல் அவர்களை தவறாக பேச வேண்டாம். நீங்கள் போடும் அந்த ஒரு கமெண்ட் அவர்களை மட்டும் பாதிக்காது, அவர்களின் குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும். இப்போ நான் அந்த கமெண்டை படிப்பேன், பிறகு எனது கணவர், என் குழந்தைகள் படிப்பார்கள். அது எந்த அளவிற்கு அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று உங்களுக்கு தெரியுமா?
ஒன்று, இரண்டு படங்களில் நான் கவர்ச்சியாக நடித்தேன். ஏனென்றால் என் தந்தை கடைசி நிமிடம் மருத்துவமனை சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை. அந்த நேரத்தில் வேலை செய்தால் தான் எனக்கு பணம் வரும், அதனால் தான் அந்த நேரத்தில் நான் அப்படி நடித்தேன்.
இப்படி நடிப்பவர்களை பற்றி கமெண்ட் செய்பவர்கள், call girls என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால், அப்படி யாரும் கிடையாது. இதனால் தயவு செய்து கமெண்ட் செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து செய்யுங்கள், ஏன் என்றால், உங்களைப் போல நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது.” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...