Latest News :

குடிபோதையில் தயாரிப்பாளரை தாக்கிய சஞ்சனா கல்ராணி! - போலீஸ் விசாரணை
Monday December-30 2019

பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அவ்வபோது சில தமிழ்ப் படங்களில் தலை காட்டும் இவர், தற்போது அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், விஜய் டிவி காமெடி நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், இரவு நேர பார்ட்டி ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையாகிய சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமா தயாரிப்பாளரை பீர் பாட்டிலால் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்தில் நடைபெற்ற இரவு நேர மது விருந்தில் சஞ்சனா கல்ராணி, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, போதையில் கன்னட தயாரிப்பாளர் வந்தனா ஜெயினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே ரசாரமாக வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சஞ்சனா தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் வந்தனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து, சஞ்சனா கல்ராணி மீது வந்தனா ஜெயின் போலீசில் புகார் அளிக்க, போலீசார் சஞ்சனாவிடம் விசாரணை மேற்கொண்டார்.

 

விசாரணையில், வந்தனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மை தான், ஆனால் அவரை பீர் பாட்டிலைக் கொண்டு தாக்கவில்லை, என்று சஞ்சனா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Related News

6058

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery