Latest News :

மக்களின் வரவேற்பு, ஊடகங்களின் பாராட்டு! - மகிழ்ச்சியில் ‘சில்லுக் கருப்பட்டி’ தயாரிப்பாளர்
Monday December-30 2019

2019 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களில் தரமான படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் படம் ‘சில்லுக் கருப்பட்டி’. கடந்த வாரம் வெளியான இப்படம் தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இருப்பதோடு, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமான படமாகவும் அமைந்திருக்கிறது.

 

ரிலீஸுக்கு முன்பாக ஊடகங்களுக்கு திரையிடப்பட்ட சிறப்பு காட்சியால் பெரிதும் பாராட்டுப் பெற்ற இப்படம், தற்போது ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ஏ,சி,பி என்று அனைத்து செண்டர்களிலும் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹலிதா சமீம் கதை சொல்லியிருக்கும் விதத்திலும், ஒவ்வொரு பாத்திரத்தை உருவாக்கியிருக்கும் விதத்திலும்  இயல்பை மீறாத நேர்த்தியான படைப்பாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் நான்கு கதைகளும் நான்கு விதமாக, நகரின் முடுக்குகளில் வாழும் மனிதர்களின் உறவை, அன்பின் அவசியத்தை பேசுவதாக அமைந்திருக்கிறது. 

 

’ஹே அம்மு’ நகரின் அடுக்கு மாடியில் வாழும் தம்பதியின் உறவை சொல்கிறது. பணியில் பரபரப்பாக இருக்கும் கணவன்( சமுத்திர்கனி) வீட்டில் தனிமையில் உழழும் மனைவி ( சுனைனா ) இருவரின் இடையேயான உறவுச் சிக்கலை அவர்களின் அன்பு வெளிப்படுவதை அழகான கதையாக சொல்கிறது. ’பிங்க் பேக்’ சமூகத்தின் இருவேறு அடுக்கில் வாழும் வளர் இளம் சிறுவர்களிடையே உருவாகும் அன்பை அழகாக சொல்கிறது. இன்னொருபுறம் ’காக்கா கடி’ எனும் கதையில் மீம் கிரியேட்டர் ஒருவனுக்கும் (மணிகண்டன்) உடை வடிவமைக்கும் மாடர்ன் பெண்ணுக்கும் (நிவேதிதா சதீஸ்) இடையே நிகழும் காதலை அழகான தருணங்களை சொல்கிறது. ’டர்டிள் வாக்’ எனும் கதை முதிய வயதில் இருக்கும் இருவருக்குள் ( ஶ்ரீராம் , லீலா சாம்சன் ) ஏற்படும் உறவை சொல்கிறது.

 

Sunaina in Sillu Karuppatti

 

வாழ்வின் இயல்பை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இப்படைப்பு வெகு அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களால் மாயாஜாலத்தை திரையில் நிகழ்த்தியிருக்கிறது. அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்தி, யாமினி ஞானமூர்த்தி ஆகிய நான்கு கலைஞர்களின் ஒளிப்பதிவும் பிரதீப் குமாரின் அற்புத இசையும் படத்தை ஒரு பேரனுபவமாக மாற்றியிருக்கிறது.

 

Divine Productions சார்பில் படத்தை தயாரித்திருக்கும் வெங்கடேஷ் வேலினேனி படத்திற்கு கிடைத்திருக்கும் உற்சாக வரவேற்பில் பெரும்  மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் சில்லுக்கருப்பட்டி போன்று உலக ரசிகர்கள் அனைவரையும் கவரக்கூடிய நேர்த்தியான படைப்புகளை Divine Productions தொடர்ந்து தரும், என்றார்.

 

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி சிக்னேச்சர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை ரிலீஸ் செய்துள்ளது.

Related News

6059

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery