இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுக்க வேண்டும், என்று இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.என்.எஸ் மூவிஸ் நிறுவனம் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் படம் ’தமிழரசன்’. பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன், நடிகர் ராதாரவி, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசுகையில், “இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக அமைந்ததற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரும், விஜய் ஆண்டனியும் தான். நாங்கள் இரண்டு ராஜாக்களைப் பார்த்து தான் வளர்ந்தோம். அந்த இரண்டு ராஜாக்கள் இளையராஜாவும், பாரதிராஜாவும் தான். அவர்கள் இந்த மேடையில் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றியடைய அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “பெயரிலே பொன்னை வைத்துள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், விஜய் ஆண்ட்னி, சிவா அனைவருக்கும் வணக்கம். சிவா நல்ல படம் எடுக்கணும். என்று நினைப்பவர். விஜய் ஆண்டனி ஒரு ஆச்சர்யமான முகம். ரொம்ப சாதாரணமா இருப்பார். ஆனால் படத்தில் வேற மாதிரி இருக்கிறார். நல்ல இசை அமைப்பாளர் இப்போது நல்ல நடிகர். தமிழரசன் என்ற பெயர் ரொம்ப நல்லாயிருக்கு. இளையராஜாவை மிஞ்சுவதற்கு இனி ஒரு இசை அமைப்பாளர் பிறந்து வந்தாலும் முடியாது. படத்தை ஒன்றுமே இல்லாமல் எடுத்துக் கொடுத்தாலும் அந்தப்படத்திற்கு உயிர் கொடுத்து விடுவார் இளையராஜா. பேசாத படத்தை பேச வைத்தவர் இளையராஜா. அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் இசைக்கு ஈடு இணையில்லை. இந்த இயக்குநரை சிவா தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயம் பாபு யோகேஸ்வரன் நல்ல இயக்குநராகத் தான் இருப்பான். இனி வரும் இளைஞர்கள் கொஞ்சம் வயலன்ஸ் இல்லாமல் படமெடுங்கள். இது நல்ல படம். சிவா மனசிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியை அடையும்" என்றார்.
விஜய் ஆண்டனி பேசுகையில், “இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா அகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செலவு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், பாருங்கள்.” என்றார்.
தயாரிப்பாளர் பெப்சி சிவா பேசுகையில், “பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி. பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்த படத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு அவரின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும், பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது.” என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழரசனின் வெற்றிக்காக உழைத்தவர்களை எதிர்காலத்தில் இதற்கு நிகரான ஒரு படம் என்பது போன்ற வாழ்த்துக்களைச் சொன்னவர்களை வணங்குகிறேன். பாரதிராஜா இளையராஜாப் பற்றி பேசும் போது இதற்கு மேல் யாராலும் இளையராஜாவை புகழ முடியாது என்று நினைத்தேன். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டும். தயாரிப்பாளர் சிவா ஒரு வேலையை எடுத்தால் அதை மிகச்சிறப்பாக முடிக்கக் கூடியவர். அவருடைய துணைவியாரும் இப்படத்தை தயாரித்து இருக்கிறார்கள். திரைத்துறையில் இருக்கும் சில பிரச்சனைகளை சிலர் குறிப்பிட்டார்கள். நிச்சயமாக இது குறித்து உரிய அமைச்சர்களிடம் பேசுவோம். அதன் மூலம் உங்களோட இருப்போம் என்று சொல்லிக்கொள்கிறேன்..எங்களோடு இணைந்து பயணிக்கும் திரையுலகினரை அன்போடு வரவேற்று வாழ்த்துகிறேன். இந்தப்படம் மிகச்சிறந்த திரைப்படம் என்ற உச்சத்தை தொட வேண்டும். என்று வாழ்த்துகிறேன். உங்களுக்கு இறைவன் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு. விஜய் ஆண்டனி எங்கள் ஊர்க்காரர். எங்கள் ஊர்க்காரரில் நடிகர்களில் யாரும் பெரிதாக வரவில்லை. விஜய் ஆண்டனி மிகப்பெரிய நடிகராக அடையாளம் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...