மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான ரம்யா நம்பீசன், தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிகையாக பயணித்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் ரம்யாவால் ஜோடி சேர முடியவில்லை. இருந்தாலும், அவ்வபோது தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர், சில திரைப்படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.
தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘தமிழரசன்’, ரியோ ராஜுக்கு ஜோடியாக தலைப்பு வைக்காத ஒரு படம், ’ரேஞ்சர்’, ‘சிவா’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ரம்யா நம்பீசன், இரண்டு மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘தமிழரசன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட ரம்யா நம்பீசனை படக்குழுவினர் அவமானப்படுத்தியதால் அவர் நிகழ்ச்சியில் பாதியிலேயே கிளம்பி விட்டார்.
முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் என அரசியல் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ‘தமிழரசன்’ இசை வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகி ரம்யா நம்பீசனை படக்குழுவினர் சரியாக கவனிக்காததோடு, மேடையில் அவரை பின் வரிசையில் உட்கார வைத்துவிட்டார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே வரிசையாக முன் வரிசையில் உட்கார வைத்தவர்கள், ரம்யா நம்பீசனை, பின் இருக்கையில் உட்கார வைத்ததோடு, படத்தின் நாயகியாக அவரைப் பற்றி இயக்குநர் மற்றும் ஹீரோ யாருமே பேசவில்லை.
இதனால், அப்செட்டான ரம்யா நம்பீசன், ஒரு கட்டத்தில் அங்கிருக்க முடியாமல், கோபமாக பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து கிளம்பிவிட்டார்.
மலையாள திரையுலகில் நடிகர்களின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த ரம்யா நம்பீசன், நடிகைகளுக்கான அமைப்பு ஒன்றை தொடங்கி அதில் நிர்வாகியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...