வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த ‘மாநாடு’ தலைப்பு அறிவிப்போடு நின்ற நிலையில், திடீரென்று சிம்புவை படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். ஆனால் அவருடனான நட்பு தொடரும். அதே சமயம், வேறு ஒரு ஹீரோவை வைத்து ‘மாநாடு’ படத்தை எடுப்பேன், என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமட்சி அறிவித்தார்.
சிம்பு தான் சுரேஷ் காமாட்சியை அழைத்து கால்ஷீட் கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த சிம்புவையே சுரேஷ் காமாட்சி நீக்கியது கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சிம்புக்காக காத்திருந்ததில் பல லட்சங்கள் கரைந்ததால் தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது. இனியும் அந்த இழப்பை தாங்க முடியாதது என்பதால் தான் இந்த முடிவு, என்று சுரேஷ் காமாட்சி காரணம் சொல்ல, அதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு தரப்பு, சுரேஷ் காமாட்சியிடம் பணம் இல்லை, அதனால் தான் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே சிம்பு வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார், என்று கூறப்பட்டது.
இப்படி ஒருவர் மீது ஒருவர் மாறி குற்றம் கூற, சிம்பு ‘மகா மாநாடு’ என்ற தலைப்பில் புது படம் அறிவிப்பை வெளியிட, இயக்குநர் வெங்கட் பிரபு அப்செட்டாகிவிட்டார். தனது தலைப்பு எதிர் தலைப்பாக சிம்பு ஒரு படத்தை அறிவித்ததை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால், அவர் இப்படி செய்வார் என்று நினைக்கவில்லை, என்று வருத்தப்பட்டார்.
இப்படி மாநாடு பெரும் பிரச்சினையாக உருவெடுக்க வெளிநாட்டில் இருந்து திரும்பிய சிம்பு, அனைவரிடமும் சமரசமாக பேசி பிரச்சினையை முடித்ததோடு, மாநாடு படத்தில் தானே நடிப்பதாக விருப்பம் தெரிவிக்க, சுரேஷ் காமாட்சியு அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், சபரிமலைக்கு மாலை போட்ட போது சிம்புவை பார்த்த சுரேஷ் காமாட்சியால், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால், மாநாடு மீண்டும் பிரச்சினையில் மாட்டுக் கொள்ள, மாநாடு படம் தொடங்குவதில் மீண்டு சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக தயாரிப்பாளர் தரப்போ சிம்பு தரப்போ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விபரங்களை வரும் பொங்கல் தினத்தின்று வெளியிடுவேன், என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று தெரிவித்துள்ளார்.
ஆக, சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ படம் உருவாக இருப்பது உறுதியாகியுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...