கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தன்ஷிகா, எஸ்.பி.பி.சரண் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ‘விழித்திரு’ வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே படம் தயாராகிவிட்டாலும், சில பிரச்சினைகளினால் ரிலிஸாகம் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இப்படத்தின் இயக்குநர் மீரா கதிரவன் கூறுகையில், “இந்த தாமதம் மிகுந்த மனவலியை தந்தது. ஆனால் இந்த தொழிலில் இவ்வாறான எதிர்பாராத காரியங்கள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. எங்கள் படத்தை ரிலீஸ் செய்யவுள்ள 'சவுந்தர்யன் பிக்சர்ஸ்' நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களின் கதை இன்றும் புதுமையாக இருக்கும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. தரமான கதையை சுவாரஸ்யமாக தந்திருப்பதால் இப்படத்தை சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.” என்றார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...