ரஜினிகாந்தை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மட்டும் இன்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் விளம்பரப் பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, ‘தர்பார்’ படம் குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ், ”ரஜினி சாருக்காக ஒரு கதை பண்ண வேண்டும், என்று முடிவானதும், சந்திரமுகியில் அவர் நடித்த வேட்டையன் கதாப்பாத்திரத்தை மெருகேற்றி ஒரு கதை பண்ணலாம் என்று தோன்றியது. ரஜினி சாரிடமும் இதை சொன்ன போது, அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், லைகா நிறுவனத்திற்கு தான் நாம் படம் பண்ண போகிறோம். ஆனால், சந்திரமுகி படத்தை தயாரித்தது வேறு ஒரு நிறுவனம், வாசு சார் இயக்கியிருக்கிறார். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதால், அந்த ஐடியாவை விட்டுட்டேன்.
பிறகு ரஜினி சாரை எப்படி காட்டலாம், அவர் தொடர்ந்து பண்ணக்கூடிய கதாப்பாத்திரங்களில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும், என்றும் யோசித்த தான் இந்த ஆதித்ய அருணாச்சலம் கதாப்பாத்திரத்தை உருவாக்கினேன். ரஜினி சார், ஒரு தாதாவாக நடிக்கிறார், இல்லை என்றால் செல்வந்தராக இருந்து பிறரால் ஏமாற்றப்பட்டவராகவோ அல்லது நண்பர்களாக ஏமாற்றப்பட்டவராகவோ நடிக்கிறார். இப்படி தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிக்கும் அவரை புதுஷாக காட்டுவதோடு, ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘தர்பார்’ கதையை எழுதியிருக்கிறேன்.” என்றார்.
ஏ.ஆர்.முருகதாஸின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வரும் நிலையில், திடீரென்று இயக்குநர் பி.வாசு, 'சந்திரமுகி 2' படத்தை விரைவில் தான் இயக்க இருப்பதாக ஸ்டேட்மெண்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய பி.வாசு, கன்னடத்தில் ஏற்கனவே சந்திரமுகி 2 படத்தை இயக்கிவிட்டேன். அங்கு பெரிய வெற்றி பெற்றது. தமிழுக்காக சில மாற்றங்கள் செய்து திரைக்கதையை முடித்துவிட்டேன். பெரிய ஹீரோ ஒருவரிடமும் கதை சொல்லிவிட்டேன். தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமும் சொல்லிவிட்டேன். தற்போது ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்கியிருக்கிறேன். விரைவில் சந்திரமுகி 2 படப்பிடிப்பை தொடங்கிவிடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
’சந்திரமுகி 2’ குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்த இயக்குநர் பி.வாசு, ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டிக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், என்றால் வேறு யாராவது சந்திமுகியின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடுவார்களோ என்று பீதியடைந்து விட்டார் போல.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...