Latest News :

”முயற்சிகள் வெற்றியாகட்டும், வெற்றிகள் தொடரட்டும்”! - துரை சுதாகர் புத்தாண்டு வாழ்த்து
Wednesday January-01 2020

‘களவாணி 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நடிகர் துரை சுதாகர், கோடம்பாக்கத்தின் முக்கிய மனிதராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். காரணம், தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்ட சில படங்களுக்கு கைகொடுத்து வரும் இவரது நடவடிக்கையால் பல சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

 

இப்படி பலருக்கு உதவி செய்து, ஆபத்து பாந்தவனாக வலம் வரும் துரை சுதாகர், என்ன தான் மற்றவர்களின் படங்களுக்கு உதவி செய்தாலும், அது வேறு, நடிப்பு வேறு என்று, தண்டாவளத்தைப் போல தனது சினிமா பயணத்தில் மற்றவர்களையும் பயனடைய செய்து வருகிறார்.

 

அந்த வகையில், நடிப்பு மீது பேரார்வம் கொண்ட துரை சுதாகருக்கு பல முன்னணி இயக்குநர்கள் தங்களது படங்களில் முக்கியமான கதாப்பாத்திரங்களை வழங்கி வருகிறார்கள். அதன்படி, ‘டேனி’ படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு இணையான வேடத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் துரை சுதாகருக்கு, இந்த 2020 ஆம் ஆண்டு பொற்காலம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பல முன்னணி இயக்குநர்கள் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார்.

 

Actor Durai Sudhakar

 

இந்த நிலையில், தனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும் 2020 ஆம் ஆண்டு, பிறருக்கும் நல்ல ஆண்டாகவே அமையும் என்று வாழ்த்து செய்தி வெளியிட்டிருப்பவர், ”முயற்சிகள் வெற்றிகளாகட்டும், வெற்றிகள் தொடரட்டும்” என்று தனது ரசிகர்கள் மற்றும் தமிழ் திரையுலகினரை உற்சாகமடைய செய்திருக்கிறார்.

Related News

6073

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery