Latest News :

மருத்துவக் கழிவுகளால் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து பேசும் ‘கல்தா’!
Thursday January-02 2020

தமிழக மக்கள் பல்வேறு வகையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு எதிர்கொண்டு வரும் நிலையில், மக்களுக்கு பேராபத்துகளை விளைவுக்கும் ஒரு பிரச்சினையாக மருத்துவக் கழிவும், மாமிச கழிவும் உருவெடுத்துள்ளது. ஆனால், இது பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடமும் இல்லாதது ஒரு பக்கம் இருக்க, இதன் ஆபத்தை அறியாத சில அதிகாரிகள், சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு, அண்டை மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளை தமிழகத்திற்கு அனுமதித்து விடுகிறார்கள் என்பது தான் அதிர்ச்சியான உண்மை.

 

பூதாகரமாக உருவாகியுள்ள இந்த பிரச்சினை குறித்து பேச வருகிறது ‘கல்தா’ திரைப்படம். கமர்ஷியலுக்காக இப்படி ஒரு தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கரு, கமர்ஷியல் படத்தை தாண்டி, மக்கள் நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், மாமிச கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது இவற்றினால் மக்களின் உடல் நிலை பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதோடு, பலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். ஆனால், இது பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததோடு, இது குறித்து வெளி உலகிற்கும் தெரியாமல் போகிறது. அதே சமயம், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அதற்கு யாரெல்லாம காரணமாக இருக்கிறார்கள், என்பதை வெளி உலகத்திற்கு காட்டும் நோக்கில் உருவாகியிருக்கிறது ‘கல்தா’.

 

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், மற்றொரு ஹீரோவாக சிவ நிஷாந்த் நடித்திருக்கிறார். அய்ரா, திவ்யா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் அப்புகுட்டி, கஜராஜ், ராஜசிம்மன், டைகர் தங்கதுரை, எஸ்.எம்.டி.கருணாநிதி, சுரேஷ், காக்கா முட்டை சசி, முத்து விரா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

‘தெரு நாய்கள்’ படம் மூலம் விவசாய மற்றும் விவசாயிகள் பிரச்சினையை பேசிய செ.ஹரி உத்ரா இயக்கியிருக்கும் இப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடு ரகுபதி, செ.ஹரி உத்ரா, ரா.உஷா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

 

பி.வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.ஜெய் கிரிஷ் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து, கவிஞர் வித்யாசாகர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கோட்டி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி பேசியிருக்கும் இப்படத்தில், அதற்கான தீர்வு குறித்தும் சொல்லியிருக்கிறார்களாம். அது படத்தின் ஹைலைட்டாக இருப்பதோடு, படத்தின் வசனங்கள் மூலம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் ஹரி உத்ரா, “மருத்துவக் கழிவுகளை அத்துமீறி கொட்டுவது தமிழகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் தான் என்றாலும், நான் எழுதிய கதை கற்பனை தான். இந்த படத்தில் எந்த ஒரு ஊரையோ நான் குறிப்பிடவில்லை. அதே சமயம், கற்பனையாக ஒரு கிராமத்தை உருவாக்கி இருக்கிறேன். அதில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், அந்த மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதை அரசியல்வாதிகள் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார்கள், அதன் பின்னணி குறித்து தான் சொல்லியிருக்கிறோம். அரசியல்வாதிகள் அனைவரையும் தவறு சொல்ல முடியாது. ஒரு சில தவறான அரசியல்வாதிகளால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது என்பதை சொல்லியிருக்கிறோம். அதேபோல், நம்மை சுற்றி நடப்பவை எல்லாமே அரசியலாக இருக்கும் போது, நாமும் அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை என்பதையும் சொல்லியிருக்கிறேன். அதற்காக தான் படத்தின் கேப்ஷனாக ‘அரசியல் பழகு’ என்றும் சொல்லியிருக்கிறேன்.

 

விழிப்புணர்வு மற்றும் அரசியல் படமாக உருவாகியிருந்தாலும், காதல், காமெடி என்று மறுபக்கம் கமர்ஷியல் விஷயங்களையும் வைத்திருக்கிறேன். மொத்தத்தில், ஒரு தரமான கமர்ஷியல் படமாக ‘கல்தா’ இருக்கும்.” என்றார்.

 

Kaltha

 

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளை நடைபெற்று வரும் ‘கல்தா’ விரைவில் தமிழக அரசியல்வாதிகளிடம் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Related News

6077

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery