தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களில் மக்களிடம் அதிகம் கவனம் பெற்றவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் முலம் சோசியல் மீடியாவில் டிரெண்டான ஜூலிக்கு, பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும், ஜல்லிக்கு போராட்டத்தைப் போலவே பொண்ணு பிக் பாஸ் போட்டியிலும் வெலுத்து வாங்கப் போகிறது, என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் ஜூலி செய்த சில காரியங்களால் அவர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதோடு, அவரை வில்லியாகவே பார்த்தனர். அவரும் தொடர்ந்து தான் செய்யும் அனைத்து விஷயங்களாலும் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி வந்தார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் பல கிடைத்து பிஸியானாலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் அவரை அசிங்கப்படுத்தி நிகழ்ச்சியில் பாதியில் இருந்து வெளியேற்றுவதை தொடர்ந்து செய்தார்கள். இதனால், ஒரு கட்டத்தில் ஜூலி, பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதை நிறுத்தியே விட்டார்.
இந்த நிலையில், புத்தாண்டுக்காக மலையாளத் திரைப்படம் ‘பிரேமம்’ படத்தின் பாடல் ஒன்றுக்கு நடித்து வீடியோ ஒன்றை ஜூலி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் ஜூலியை தாறுமாறாக திட்டி கமெண்ட் போட்டு வர்கிறார்கள். சிலர் வாழ்த்தவும் செய்திருக்கிறார்கள்.
பிக் பாஸ் முதல் சீசன் முடிந்து சில ஆண்டுகள் ஆனாலும், ஜூலியை திட்டுவதையும், அசிங்கப்படுத்துவதையும் நிறுத்தாத ரசிகர்களால், புத்தாண்டு துவக்கத்திலேயே ஜூலி ரொம்ப அப்ஷட்டாகிவிட்டாராம்.
ஜூலியை அசிங்கப்பட வைத்த அந்த வீடியோ இதோ,
— மரிய ஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 3, 2020
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...