Latest News :

கணவர் கொடுத்த கஷ்ட்டம்! - மேடையில் கதறி அழுத சாயா சிங்
Sunday January-05 2020

2000 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முன்னுடி’ (Munnudi) என்ற படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமான சாயா சிங், 2003 ஆம் ஆண்டு தனுஷின் ‘திருடா திருடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததும் ஒரு பாடலுக்கு நடனம் ஆட செய்தார்.

 

2018 ஆம் ஆண்டு சீரியல் மற்றும் சினிமா நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாயா சிங்கிற்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை தவிர்த்து வந்த சாயா சிங், குழந்தை வளர்ந்துவிட்டதால், மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

சீரியல் மற்றும் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சாயா சிங், கடந்த ஆண்டு விஷாலின் ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி குடும்ப விழா என்ற தலைப்பில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களி சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதன் இரண்டாம் பகுதி இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

 

இதில், கிருஷ்ணாவும், சாயா சிங்கும் விருது பெறுகிறார்கள். அப்போது, பேசிய கிருஷ்ணா, தான் தனது மனைவிக்கு ரொம்பவே கஷ்ட்டம் கொடுத்திருக்கிறேன், நிறைய முறை அழ கூட வைத்திருக்கிறேன். ஆனால், அனைத்தையும் பொருத்துக் கொண்டு அவர் என் முன்னேற்றத்திற்காக துணை நின்றார், என்று கூறுகிறார்.

 

உடனே சாயா சிங், வாழ்க்கையில் எனக்கு நல்ல துணை அமைய வேண்டும் என்று நினைத்தேன். நான் ந் இனைத்தது போலவே எனக்கு கிருஷ்ணா சிறந்த வாழ்க்கை துணையாக அமைந்திருக்கிறார், என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். அவர் அழுவதை பார்த்தவர்கள் அப்படியே திகைத்து போய் விட்டார்கள்.

 

Saya Singh

 

நடிகை சாய சிங்கின் கணவர் கிருஷ்ணா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் பிரகாஷ் என்ற வேடத்தில் வாணி போஜனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6086

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

Recent Gallery