Latest News :

நடிகை கெளதமி பற்றி வெளிவராத தகவல்! - லீக்கான முதல் கணவர் புகைப்படம்
Monday January-06 2020

90 களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்த நடிகை கெளதமி, 1983 ஆம் ஆண்டு வெளியான ’வசந்தமே வருக’ என்ற படத்தில் சுப்புலக்‌ஷ்மி என்ற கதாப்பாத்திரத்தில் துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு, 1987 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

 

1988 ஆம் ஆண்டு வெளியான ‘குரு சிஷ்யன்’ மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கெளதமி, அப்படத்தை தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

 

இதற்கிடையே, சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட கெளதமி, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தவர், மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல்களில் நடித்து வந்தார்.

 

திடீரென்று கேன்சரால் பாதிக்கப்பட்ட கெளதமிக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு கரம் நீட்ட, அவர் கமலுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தார். பிறகு தனது மகளின் எதிர்காலத்தை கருதி கமலை விட்டு பிரிந்தவர், பா.ஜ.க கட்சியில் இணைந்தார்.

 

Kamal and Gouthami

 

இவை அனைத்தும், அனைவரும் அறிந்த ஒன்று தன் என்றாலும், நடிகை கெளதமியின் திருமணம் மற்றும் அவரது கணவர் பற்றி எந்த தகவலும் வெளியானதில்லை.

 

இந்த நிலையில், நடிகை கெளதமியின் முதல் கணவர் சந்தீப் பாட்டியாவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், கெளதமியின் திருமணத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Gouthami Husband

Related News

6090

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery