முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரது மறைவுக்குப் பிறகு தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் பலர் அரசியலில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். கமல் அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும், ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறி வருகிறார். ஆனால், அவர் தொடங்குவாரா, இல்லையா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
இதற்கிடையே, ஜெயலலிதா இருக்கும் போதே நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றம் மூலம் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால், சில பிரச்சினைகளால் அதை கைவிட்டவர், தற்போது தனது அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கியிருக்கிறார். குறிப்பாக, தனது ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருபவர், அரசியலில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் மூலம் தனது அரசியல் பயணத்தை சத்தமே இல்லாமல் தொடங்கியிருக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும், கலைவாணன், சங்கீதா, யோகேஸ்வரன், சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை பயன்படுத்தி தேர்தலில் நிற்கவில்லை என்றாலும், விஜய் மக்கள் இயக்கம் மூலம் இவர்கள் செய்த நலத்திட்ட உதவிகள் தான் இவர்களை உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோல் தான் நடிகர் விஜயகாந்தும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பு தனது மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்தாராம். அதில் பலர் வெற்றி பெற்ற பிறகே அவர் அரசியல் கட்சி தொடங்கினார். தற்போது விஜயும், விஜயகாந்த் வழியில் சத்தமே இல்லாமல், அரசியலில் நுழைந்திருப்பவர், வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் விஜய் நேரடியாக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
அதே சமயம், ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய், அதை வைத்தே தனது அரசியல் எண்ட்ரி குறித்து அறிவிக்க இருப்பதாகவும், தற்போது சில அரசியல் தலைவர்களுடன் அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...