ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இதுவரை வந்த தமிழ்ப் படங்களில், தமிழ் மொழியிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமையை ‘தர்பார்’ பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாவதோடு, தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது.
மேலும், அரபு நாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ‘தர்பார்’ படம் வெளியாவதோடு, பல வெளிநாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் படம் வெளியாகிறது. இதன் மூலம், தான் எப்போதும் நம்பர் 1 என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக மிக முக்கியமான படமாக அமைந்திருக்கும் ‘தர்பார்’ முதல் நாள் வசூல் மட்டும் ரூ.65 முதல் 70 கோடி வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது. அத்துடன், வசூலில் மிகப்பெரிய சாதனையை படம் நிகழ்த்தும் என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...