கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் முயற்சித்து தோல்வியை தழுவிய நிலையில், மணிரத்னம் தற்போது படப்பிடிப்பையே தொடங்கிவிட்டார். பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’-னில் ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யாவும் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுடமையாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால், இந்த நாவலை திரையில் கொண்டு வரும் முயற்சியில் தற்போதும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம்.
செளந்தர்யாவின் மே 6 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனமும் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறார்களாம். இதில், வந்தியத்தேவனாக ‘தரமணி’ புகழ் வசந்த்ரவி நடிக்க, குந்தவையாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறதாம்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...