தமிழகத்தின் முன்னணி ஆடை, தங்க நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
முதலில், தனது கடைகளுக்கான விளம்பரப் படங்களில் நடித்து ட்ரயல் பார்த்த அண்ணாச்சி, தற்போது ஹீரோவாக களம் இறங்கிவிட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரதாரர்கள் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் தங்க மாளிகை மற்றும் அதன் புரோமோட்டர்ஸ்கள் கரூர் வைஸ்யா வங்கியில் இருந்து ரூ.162 கோடி கடன் பெற்றுக் கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை என அந்த வங்கி அறிவித்துள்ளது.
இதன் மூலம், சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் மற்றும் அதன் பாதுகாவலர்களான யோகரத்தினத்தின் மகன் பல்லாகு துரை, அவரது மனைவி சுஜாதா மற்றும் மகன் ஷிரவன் உள்ளிட்டவர்களுக்கு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ரூ.162.80 கோடியை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் உரிமையாளர் பல்லாகு துரையிடம் கரூர் வைஸ்யா வங்கி அறிவிறுத்தியுள்ளது.
இந்த பல்லாகு துரை தான், தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் லெஜெண்ட் என்று கூறப்பட்டது. ஆனால், அது அவர் இல்லை என்பது தான் உண்மை.
இது குறித்து லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், தற்போது வங்கியில் கடன் வாங்கியிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கும், திரைப்படத்தில் நடிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சரவணா ஸ்டோர்ஸ் பெயரில் சென்னையில் இயங்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் தனி தனி உரிமையாளர்கள் இருக்கிறார்கள். அதன்படி, லெஜெண்ட் என்ற பெயரில் இருக்கும் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் தான் சினிமாவில் நடிக்கிறார். அவருக்கும் வங்கி கடனுக்கும் தொடர்பு இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, மக்களே வங்கியில் கடன் வாங்கியிருப்பதாக கூறப்படும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் வேறு, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட் சரவணன் வேறு. இவருக்கும் வங்கி கடனுக்கும் தொடர்பு இல்லங்கோ.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...