Latest News :

காதலரால் சிக்கலில் சிக்கிய சீரியல் நடிகை! - அதிகாரிகள் எச்சரிக்கை
Friday January-10 2020

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா சுந்தராஜன். செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், படி படியாக உயர்ந்து தற்போது செய்தி ஆசிரியராக இருப்பதோடு, சீரியல் நடிகையாகவும் மாறிவிட்டார்.

 

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமான சரண்யா, தற்போது தமிழகத்தை தாட்டி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழகர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமான முகமாகிவிட்டார்.

 

இந்த நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்துக் கொள்வதற்காக சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற சரண்யா, அங்கு அடித்த லூட்டியால் சிங்கப்பூரே கதிகலங்கி போய்விட்டதாம். தனியாக லூட்டி அடித்தால் பரவாயில்லை, காதலருடன் சேர்ந்து அடித்ததால் தான், சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கடப்பாகிவிட்டார்களாம்.

 

நிகழ்ச்சிக்காக விருந்தாளியாக அழைக்கப்பட்ட சரண்யா, தனது காதலரையும் உடன் அழைத்து சென்றதோடு, அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளையும், வசதிகளையும் தனது காதலருடன் சேர்ந்து கொஞ்சம் ஓவராக பயன்படுத்தியதோடு, தங்களது காதல் விளையாட்டுகள் மூலம் மற்றவர்களை முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், சரண்யாவை எச்சரித்து அனுப்பிவிட்டார்களாம்.

Related News

6105

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery