பிரபல நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், அம்மாநில ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் தாக்கல் செய்த பல ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவதால் அவர் கடந்த இரண்டு மாதங்களாக சிறையில் இருக்கிறார்.
இதற்கிடையே, பாவனா வழக்கில் திலீப்பின் நெருங்கிய உரவினர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இதே வழக்கில் திலீபின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதால் அவரும் கைது செய்யப்படுவார், என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விசாரணையில் போலீசாரிடம் காவ்யா மாதவன் பெயரை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து காவ்யா மாதவன் கைதாவது உறுதியாகியுள்ள நிலையில், கைதில் இருந்து தப்பிக்க காவ்யா மாதவன், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...