லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் பங்கேற்கவில்லை என்றாலும், தனக்கு விருது வழங்கு கெளரவிக்கும் விழாக்களில் தவறாமல் கலந்துக் கொள்கிறார். அப்படி தான் சமீபத்தில் டிவி சேனல் ஒன்று வழங்கிய இரண்டு விருதுகளை நேரில் வந்துக் வாங்கிக் கொண்டார்.
இப்படி ஆண்டுக்கு பல படங்களில் நடித்து, பல விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கும் நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக ‘மூக்குத்தி அம்மன்’ படம் இருக்கப் போகிறதாம். இதை சொன்னவர், அப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரும், கதையாசிரியருமான ஆர்.ஜே.பாலாஜி தான்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தற்போது 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாம். தொடர்ந்து 44 கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடத்திய ஆர்.ஜே.பாலாஜி, இன்னும் ஒரு வாரம் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப் போகிறார். இதன் பிறகு முழு படப்பிடிப்பும் நிறைவுப் பெறுகிறது.
அறிமுக இயக்குநர் என்.ஜே.சரவணன் உடன் இணைந்து இயக்கியிருக்கும் இப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், “Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம்.

இயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும்.” என்றார்.
நயன்தாரா முதல் முறையாக அம்மன் வேடத்தில் நடிப்பதால் இப்படத்திற்காக விரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...