தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் மட்டுமே. அதிலும் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இதனால், அவரது படங்கள் இந்தியாவை கடந்து ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் பெரும் வரவேற்பு பெறுவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை வைத்து ரஜினிகாந்த் தான் எப்போதும் நம்பர் 1, என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜய்க்கு தான் முதலிடம், அதன் பிறகு தான் ரஜினி, அஜித் எல்லாம், என்று பிரபல தயாரிப்பாளர் கேயார் அளித்திருக்கும் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கேயார் சமீபத்தில் அளித்த பேட்டியில், ”ரஜினி படத்தை விட விஜய் படத்திற்கு தான் அதிகம் மார்க்கெட் இருக்கிறது. ‘பிகில்’ படம் ஆவேஜ் தான். ஆனால், அதுவே இந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்றால், ஒருவேளை படம் சூப்பராக இருந்தால் வசூல் எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். விஸ்வாசம், பேட்ட ஒன்றாக வந்தாலும் மக்கள் அதிக விடுமுறை என்பதால் அந்த இரண்டு படங்களையும் பார்த்தார்கள். அஜித் படம் ரஜினி படத்தை விட கொஞ்சம் அதிகமாக வசூல் செய்தது.
எப்போதும் விஜய்க்கு தான் முதல் இடம். அவருக்கு அடுத்ததாக அஜித், ரஜினிக்கு மூன்றாவது இடம் மட்டும் தான்.” என்று தெரிவித்திருக்கிறார்.

கேயாரின் இந்த பேட்டி அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை கோபமடைய செய்தாலும், விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...