1980 ஆம் ஆண்டு வெளியான ‘பஸார்’ படத்தின் மூலம் நடிகையான தபு, ‘கூலி நம்பர் 1’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். அதன் பிறகு இந்திப் படங்களில் நடித்தவர். 1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து வருபவர் சிறந்த நடிகைக்காக தேசிய விருது, மத்திய அரசின் பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் தபுவுக்கு தற்போது வயது 48 ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து பல்வேறு வேடங்களில் நடித்து வருபவர், அவ்வபோது சர்ச்சையான வேடங்களிலும் நடிக்கிறார்.
இந்த நிலையில், 48 வயதாகும் தபு 24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது நிஜத்தில் அல்ல, ஒரு படத்திற்காக தான்.
மீரா நாயர் இயக்கத்தில் ‘ஏ சூட்டபிள் பாய்’ (A Suitable Boy) என்ற வெப் சீரிஸில் தபு நடிக்கிறார். இதில் தபுக்கு ஜோடியாக இஷான் கத்தர் என்ற இளைஞர் நடிக்கிறார். இவருக்கு 24 வயது தான் ஆகிறது. 48 வயதாகும் தபு இந்த 24 வயது இளைஞருடன் ரொமான்ஸ் செய்வது தான் இப்படத்தின் கதையே.
தற்போது இந்த வெப் சீரிஸின் சில புகைப்படங்கள் வெளியாக விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதோடு, வைரலாக பரவியும் வருகிறது.
இதோ அந்த ரொமான்ஸ் புகைப்படம்,
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...