தமிழ் சினிமாவில் புரட்சிக்கரமான திரைப்படங்கள் கொடுப்பவர்களில் முக்கியமானவராக திகழும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘லாபம்’ படம் தொடங்கப்பட்ட நாள் முதல் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் பஸ்ட் லுக் எதிர்ப்பார்ப்புடன், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ருதி ஹாசன் ஹீரோயின், தன்ஷிகா, கலையரசன் முக்கியமான கதாப்பாத்திரம், டி.இமான் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படி கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் இருந்தாலும், படத்தின் பஸ்ட் லுக்கால், கமர்ஷியலையும் தாண்டிய ஒரு அரசியல் படத்தில் இருக்கிறது, என்பதை எல்.இ.டி பல்பை விட பிரகாசமாக காட்டியிருக்கிறது.
மேலும், படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டு, அது குறித்து பேசிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ”இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான், சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்று கூறியது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்திருப்பதோடு, அரசியல்வாதிகளையும் கவனிக்க வைத்திருக்கிறது.
விஜய் சேதுபதி புரொடக்ஷன் மற்றும் 7சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் உணவு அரசியலை மட்டும் இன்றி, தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு விஷயங்களின் அரசியல் பின்னணி பற்றியும் பேசப்போகிறது, என்பது படத்தின் பஸ்ட் லுக் தெளிவாக சொல்லுகிறது.
இதோ அந்த பஸ்ட் லுக்,

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...