பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் மக்களிடம் பிரபலமடைந்திருப்பதோடு, தங்களின் வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்கள் குறித்து நிகழ்ச்சியில் பதிவு செய்கிறார்கள். மக்களின் ஆதரவை பெறுவதற்காக இதை சொல்கிறார்களா அல்லது நிஜமாகவே தங்களது வாழ்க்கையில் நடந்த சோகத்தை பகிர்ந்துக் கொள்கிறார்களா, என்பது தெரியவில்லை. இருந்தாலும், பல போட்டியாளர்கள் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்து பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா, தனக்கு திருமணம் ஆன தகவலை கூறியதோடு, தனக்கு விவாகரத்து நேர்ந்ததையும், தனக்கு ஒரு மகன் இருப்பதையும் கூறி அழுதார். அதுவரை அவருக்கு திருமணம் ஆன தகவல் பெரும்பாலனவர்களுக்கு தெரியாத நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அந்த உண்மையை உலகிற்கு கூறினார்.
இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் சீசன் 13 யில் போட்டியாளராக பங்கேற்ற சீரியல் நடிகை ராஷ்மி, தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து பகிர்ந்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மியின் குடும்பம் மிகவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவரது அம்மா, பெண் குழந்தை பெற்றதால் மேலும் அதிகம் கஷ்ட்டப்படுவோம், என்று கூறியதோடு, ”நமக்கு ஏன் பெண் பிறந்தாள்?” அவளால் தான் பண பிரச்சினை, என்று அடிக்கடி அவரது அப்பாவிடம் சொல்லுவாராம்.
இதை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்த ராஷ்மி, இனி நாம் குடும்பத்திற்கு பாரமாக இருக்க கூடாது, என்று நினைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால், அவரது உறவினருக்கு விஷயம் தெரிந்து, அவர் ராஷ்மியை காப்பாற்றியிருக்கிறார். அந்த சம்பவத்திற்குப் பிறகும் தொடர்ந்து பல பிரச்சினைகளை ராஷ்மி எதிர்கொண்டாராம்.
இருந்தாலும், வாழ்க்கையில் இனி எதற்காகவும் வருந்தக் கூடாது, தைரியமாக எதிர்த்து நின்று போராட வேண்டும், என்று முடிவு செய்து முன்னேறியதாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...