பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேவதையை கண்டேன்’ தொடரில் நடித்து வரும் மகாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக, நடிகர் ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையால், ’தேவதையை கண்டேன்’ தொடரின் டி.ஆர்.பி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டி.ஆர்.பி-யை உயர்த்த சேனல் நிர்வாகம் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்ததாம்.
இதற்கிடையே, ‘தேவதையை கண்டேன்’ தொடரை விரைவில் முடிக்க முடிவு செய்த சேர்னல் நிர்வாகும் வேறு ஒரு தொடரை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், மகாலக்ஷ்மியின் வாய்ப்பு பறிபோன நிலையில், அவருக்கு நடிகை ராதிகா கை கொடுத்திருக்கிறார். ஆம், ராதிகா தயாரித்து நடிக்க இருக்கும் ‘சித்தி 2’ தொடரில் மகாலக்ஷ்மிக்கு முக்கியமான கதாப்பாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘சித்தி 2’ தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், மக்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என்று கூறப்படுகிறது.
மகாலக்ஷ்மி ராதிகா மூலமாக தான் தொலைக்காட்சி தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...