ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘தர்பார்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரித்திருக்கும் இப்படம் தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
இதற்கிடையே, படத்தின் வசூல் குறித்து பல்வேறு தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், லைகா நிறுவனம் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ‘தர்பார்’ வெளியான 4 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பொங்கல் விடுமுறை நாளை முதல் தொடங்குவதால், வசூல் இன்னும் அதிகரிக்கும் என்பதால், தர்பார் வசூலில் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...