மீண்டும் ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கியிருக்கும் சிம்பு சமீபத்தில் சபரி மலை கோயிலுக்கு மாலை போட்டு சென்றவர், ‘மாநாடு’ படத்தி விரைவில் நடிக்க இருக்கிறார்.
மேலும், முதல் முறையாக இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர். அத்துடன், சிம்புக்கான இஸ்லாமியர்ப் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து அனுப்ப வேண்டுமாம். அதில், ஒரு பெயரை படக்குழு தேர்வு செய்யுமாம். அப்படி தேர்வு செய்யப்படும் பெயரை அனுப்பியவர் ஒரு நாள் முழுவதும் ‘மாநாடு’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கலாமாம்.
சிம்பு மீது ரசிகர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை தணிக்கும் விதமாக இப்படி ஒரு ஆஃபரை அறிவித்திருக்கும் ‘மாநாடு’ படக்குழு, படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
படத்தில் சீனியர் இயக்குநர்களும், நடிகர்களுமான பாரதிராஜா, எஸ்ஏ சந்திரசேகர் ஆகியோர் நடிகர்களாக படத்தில் இணைந்துள்ளனர். அவர்களுடன் பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய, ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். சில்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, சேகர் கலையை நிர்மாணிக்கிறார். வாசுகி பாஸ்கர் ஆடை வடிவமைப்பை கவனிக்க, யூனி ஜான் டிசைனராக பணியாற்ற, மக்கள் தொடர்பை ஜான் கவனிக்கிறார்.
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...