பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, அதே நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த நல்ல இமேஜையும் கெடுத்துக் கொண்டார். சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர், அதை வைத்து பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக பங்கேற்றார்.
போட்டியின் ஆரம்பத்தில் ஜூலியை கொண்டாடிய ரசிகர்கள், போக போக அவரது சுயரூபத்தை பார்த்து, இதையா...வீர தமிழச்சி என்று கொண்டாடினோம்” என்று அதிர்ந்து போகும் அளவுக்கு ஜூலியின் அட்டகாசம் இருந்தது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் ஜூலி மீது ரசிகர்களுக்கு இருந்த வெறுப்பும், கோபமும் குறையவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டாலும் அங்கேயும் ரசிகர்கள் அவரை அவமானப்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டனர். இதனால், கடுப்பான ஜூலி, சில காலம் வெளியே தலைகாட்டாமல் இருந்தார்.
இதற்கிடையே, அவ்வபோது சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு, நான் இருக்கிறேன், என்று அட்டெனன்ஸ் போடும் ஜூலியை, ரசிகர்கள் வச்சி செய்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஜூலையை, நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்க்க, தற்போது புகைப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் ரசிகர்களிடம் ஜூலி மொக்கை வாங்கியிருக்கிறார்.
அதவாது, நேற்று காணும் பொங்கலையொட்டி ஜூலி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக் கொண்ட தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “உங்களை வீர தமிழச்சி என்று நினை ஏமாந்த தருணம் இது” என்று கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்.
இப்படி பல நெட்டிசன்கள், இந்த புகைப்படத்தை வைத்து ஜூலியை அசிங்கப்படுத்த, அவரும், உண்மை ஒரு நாள் தெரிய வரும், அப்போது நான் யார் என்பது உங்களுக்கு தெரியும் தோழர், என்று விளக்கம் கொடுத்து வருகிறார்.
— எம் ஜூலி (M JULE) (@lianajohn28) January 17, 2020
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...