Latest News :

‘களவு தொழிற்சாலை’ சொல்ல வருவது என்ன? - இயக்குநர் டி.கிருஷ்ணசாமி பேட்டி
Sunday September-17 2017

களவு தொழிற்சாலை திரைப்படம் தொடர்பாக சில கேள்விகள் இருக்கிறது. இது சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் செய்த சிலை கடத்தல்களை பற்றியதா அல்லது, தமிழ் சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த சிலை கடத்தல் பிரிவை 1 சேர்ந்த காவல் துறை அதிகாரியின் கதையா என்றும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளது , சிலை கடத்தல் பின்னணியில் உருவான முதல் படம் இது என்பதால் இது போன்ற பல கேள்விகள் எழுகிறது.

 

உலகில் போதை மருத்து கடத்தல் மற்றும் வைரம் கடத்தலுக்கு அடுத்தபடியாக பணம் புரளும் தொழிலாக கருதப்படும் சிலை கடத்தல் தொழிலில் ஒரு ஆண்டு வருமானம் நாற்பது ஆயிரம் கோடிகள் என்று சொல்லப்படுகிறது. இந்த கதைக்களம் இந்திய சினிமாவுக்கு புதியது என்பதால் இதை படமாக்குவதில் எனக்கும் சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சவாலாக இருந்தது, குறிப்பாக ஒரு நெகட்டிவ் கதை களத்தில் படத்தில் விறு விறுப்பான காட்சிகளும், பல அதிரடி திருப்பங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும், களவு தொழிற்சாலை திரைப்படத்தில் பல எதிர்மறை பாத்திரங்களாக இருந்தாலும் செயல்பாட்டில் ஒரு பாஸிட்டிவ் தன்மை இருக்கும், இது பரபரப்பான திரைக்கதை யுக்தியில் இருந்து மாறுபட்டு இருக்கும், வயலன்சை விரும்பாத சர்வதேச கடத்தல்காரன், அவனுக்கு துணை போகும் அப்பாவி திருடன், அவனை நேசித்தாலும் அவன் செயலை கண்டிக்கும் காதலி, திரைக்கதையில் அதிரடியாக நுழையும் ஒரு இஸ்லாமிய

காவல்துறை அதிகாரி என்று இதன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சர்வதேச நிழல் உலக மனிதனின் மர்மம் நிறைந்த பயணத்தை கதைகளமாக எடுத்துக் கொண்டு, அதில் சஸ்பென்ஸ், காதல், மற்றும் விறு விறுப்பு கலந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்புதான் இந்த திரைப்படம்.

 

எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பாக எஸ்.ரவிசங்கர் தயாரித்து இருக்கும் இந்த படத்தை வெங்கி பிலிம்ஸ்

இண்டர்நேஷனல் வெங்கடேஸ் ராஜாவுடன் எஸ் 2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது.

 

செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தில், கதிர், வம்சிகிருஷ்ணா, மு.களஞ்சியம், குஷி, ரேணுகா, செந்தில் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

 

வி.தியாகராஜன் ஓளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷியாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். யோகா பாஸ்கர் எடிட்டிங் செய்ய, முரளிராம் கலையை கவனித்துள்ளார். சங்கர் நடனம் அமைக்க, அண்ணாமலை, நந்ததலாலா பாடல்கள் எழுதியுள்ளனர்.

Related News

613

”சினிமாவில் அதிகரிக்கும் பிளாக் மெயில்” - ’வள்ளுவன்’ பட விழாவில் ஆர்.கே.செல்வமணி வருத்தம்
Thursday October-30 2025

ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...

’தாரணி பட விழாவில் விஜயை விமர்சித்த நடிகர் விஜய் விஷ்வா!
Tuesday October-28 2025

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...

’கசிவு’ ஆத்ம திருப்திக்காக நடித்த படம் - எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி
Wednesday October-29 2025

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...

Recent Gallery