பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் பிக் பாஸ் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில், நான்காவது சீசன் எப்போது தொடங்கும், என்று மக்கல் ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் மக்களிடம் பிரபலமாகி விடுவதோடு, சினிமாவிலும் ஹீரோ, ஹீரோயின் ஆகிவிடுகிறார்கள். அதேபோல், அவர்கள் குறித்து எந்த தகவலாக இருந்தாலும், அதை அறிந்துக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், நாம் தற்போது பிக் பாஸ் பிரபலம் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் தகவல் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் மகத். சிம்புவின் நெருங்கிய நண்பராக இருக்கும் இவர், பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மஹத்துக்கு சில படங்களில் சோலோ ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்’ மற்றும் ‘இவன் தான் உத்தமன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மிஸ் இந்தியா பிரபலம் பிராச்சி மிஷ்ராவுக்கும், மஹத்துக்கும் வரும் பிப்ரவரி மாதம், முதல் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது திருமணத்திற்கு தேதி குறித்துவிட்டார்களாம்.

நடிகைகள் சிலருடன் கிசுகிசுக்கப்பட்ட, மஹத், பிராச்சி மிஷ்ராவை காதலித்து வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட சிலருடனும் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், இறுதியாக பிராச்சியுடன் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...