தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் திரிஷா, சுமார் 18 வருடங்கள் ஹீரோயினாகவே நடித்திருக்கிறார். இன்னமும் நடித்து வருகிறார். 36 வயது ஆனாலும், இன்னும் கல்லூரி பெண் போலவே இருக்கும் திரிஷா, தற்போது தமிழ் மட்டும் இன்றி மலையாளப் படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
பிற நடிகைகள் போல் காதலித்து பிறகு அதில் தோல்வியடைந்த திரிஷா, சென்னையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்து, நிச்சயதார்த்தம் வரை போன நிலையில், திடீரென்று திருமணம் நின்றுவிட்டது. அதில் இருந்து திருமணம் குறித்து பேசாதவர், கடைசி வரை நடித்துக் கொண்டே இருப்பேன், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ரசிகர்களிடம் சமூக வலைதளம் மூலம் பேசிய நடிகை திருஷா, திருமணம் குறித்த கேள்விக்கு, தனது திருமணம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க வேண்டும், என்ற ஆசை இருப்பதாக கூறினார். அதே சமயம், தற்போது தனக்கு திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணம் இல்லை, என்றும் தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...