Latest News :

அஜித் பெயரை கெடுக்காதீங்கடா! - பிரபல நடிகை ஆவேசம்
Tuesday January-21 2020

சினிமா நடிகர், நடிகைகளில் பலர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிலும், நடிகைகள் பலர் அவ்வபோது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இது, சில நேரங்களில் ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், பல நேரங்களில் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

 

அந்த வகையில், தற்போது ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்பவர்களுக்கும், நடிகை கஸ்தூரிக்கும் இடையே பெரியா வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதோடு, பல ஆபாசமான பதிவுகளும் பகிரப்பட்டு வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

அஜித் புகைப்படம் கொண்ட ட்விட்டர் ஐடி ஒன்றில் இருந்து நடிகைகள் குறித்த சில ஆபாசமான கருத்துக்கள் பதிவாகியிருந்தது. அதில், நடிகை கஸ்தூரி பெயரும் இடம்பெற்றிருந்தது.

 

இந்த பதிவுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கஸ்தூரி, ”மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

 

மேலும், ”அஜித் சார் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றும் கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

 

ட்விட்டர் உள்ளிட்ட எந்தவிதமான சோசியல் பக்கங்களை பயன்படுத்துவம், அது குறித்து அறிந்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டாத அஜித் ரசிகர்கள் இப்படி கீழ்த்தரமாக பேசுவது குறித்து, பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், நடிகை கஸ்தூரி அவ்வபோது இதுபோன்ற விஷயங்களை தலையிட்டு அதை ஊதி பெரிதாக்கும் வேலையை செய்வதாகவும், பலர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 

Actress Kasthuri

 

ட்விட்டரில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்து கருத்து தெரிவித்து பிரபலமான கஸ்தூரி, தன்னை விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகவே இதுபோன்ற கண்ணுக்கு தெரியாத விஷயங்களை, பலர் அறியும்படி செய்துவிடுகிறார், என்றும் கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இதில் அஜித்தை இழுப்பது எல்லாம் மகா அநியாயம், என்றும் கூறியுள்ளார்கள்.

Related News

6139

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery