சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் பிரபலமாகி வருவது போல், தொலைக்காட்சி தொகுப்பாளினிகளும் பிரபலமாகி வருகிறார்கள். அவருக்கு என்று பெரிய ரசிகர் வட்டமே இருப்பதோடு, அவர்களை சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி பிரபலமடைந்த ரம்யா, தமிழ் சினிமாவிலும் பிரபலம். தமிழ் சினிமா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர், சில தயாரிப்பு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று, மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் ரம்யா, தற்போது நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
மேலும், அவ்வபோது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர், சில சமயத்தில் கவர்ச்சியான உடை அணிந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால், ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் ரம்யா, தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோவில் ஒன்றி, சிட்டுக்குருவிகள் காதில் தனது பிரார்த்தனையை கூறி, அவைகளை ரம்யா பறக்கவிடுகிறார். இந்த வித்தியாசமான வேண்டுதள் தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்த வீடியோவில் அவர் அணிந்திருந்த உடை தொடை தெரிவதுபோல் கவர்ச்சியாக இருக்கிறது. இதனை கவனித்த ரசிகர்கள், கோவிலுக்கு இப்படி தான் கவர்ச்சியான உடை அணிந்து செல்வீர்களா? பேண்ட் எங்கே? என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...